அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம் குறள்: 51
மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
A good housewife befits the house,
spending with thrift the mates's resource.
MEANING:
குடும்பப் பாங்குடன் கணவனின் உடல்வளம் , அறிவுவளம் , பொருள்வளத்துக்கேற்ப வாழ்வை வடிவமைப்பவளே நல்ல மனைவி.
அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம் குறள்: 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
Bright is home when wife is chaste
If not all greatness is but waste.
MEANING:
குடும்பப் பாங்கு இல்லாத மனைவி வாய்த்து விட்டால் அந்தத் தலைவன் எத்தனை சிறப்புகளை தேடினும் பயனில்லையாம்.
அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம் குறள்: 53
இல்லதுஎன் இல்லவள் மாண்புஆனால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.
What is rare when wife is good
What can be there when she is bad?
MEANING:
நல்ல மனைவி வாய்த்துவிட்டால் அந்த குடும்பத்தில் இல்லாதது என்ன? அப்படி வாய்க்காவிட்டால் அங்கே இருப்பதுதான் என்ன ?
அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம் குறள்: 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
What greater fortune is for men
Than a constant chaste woman?
MEANING:
சக்கரம் அசைய வேண்டுமானால் அச்சாணி அசையாமல் நின்று தாங்க வேண்டும். கற்பு என்னும் தம் மனத் திண்மையால் குடும்பத்தை அப்படித் தாங்குபவளே தகுதியுள்ள மனைவி .
அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம் குறள்: 55
தெய்வம் தொழாஆள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.
Her spouse before god who adores,
Is like rain that at request pours.
MEANING:
கணவனையே தெய்வமாய் நெஞ்சில் நிறைத்திருக்கும் மனைவி , தன் கணவனுக்குத் தேவை அறிந்து பெய்யும் பருவ மழையாய்த் திகழ்வாள் .
No comments:
Post a Comment