Thursday, September 1, 2016

Thirukkural with English couplets



அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 56

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்வுஇலாள் பெண்.

The good wife guards herself from blame
She tends her spouse and brings him fame.


MEANING:

தன்னைக் காப்பதில், தன் கணவனைக் காப்பதில், தன் குடும்பத்தின் புகழைக் காப்பதில் எப்போதும் கருத்துடன் இருப்பவளே சிறந்த துணைவி.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

Of what avail are watch and ward?
Their purity is women's guard.

MEANING:

பெண்ணைச் சிறையிட்டுக்  காப்பதால் என்ன பயன்?
அவர்கள் தம்மை தாமே காப்பதுதான் சிறப்பு.

அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 58

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

Women who win their husband's heart
Shall flourish where the gods resort.

MEANING:

கணவனைச் சரியாக வழிநடத்தி, புகழும் பெருமையும் உடையவனாய் ஆக்கும் மனைவி, வானவர் உலகம் வழிபடும் பேற்றை பெறுவாள்.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 59

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை. 

A cuckold has not the lion - like gait
Before his detractors aright.


MEANING:

தமக்குப் புகழ் சேர்க்கும் மனைவி வாய்க்கப் பெறாதோர், சிங்கம் போன்ற தம் கம்பீரத்தை இழப்பர், கூணிக் குறுகி வாழ்வர்.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் 
நன்கலம் நன்மக்கள் பேறு.

An honest wife is home's delight
And children good are jewels abright.


MEANING:

நல்ல மனைவியே ஒரு குடும்பத்தின் அழகு, நல்ல குழந்தைகளோ அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள்.

No comments:

Post a Comment