அதிகாரம்: 7 மக்கள் பேறு குறள்: 61
பெரும்அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கள்பேறு அல்ல பிற.
The world no higher bliss bestows
Than children virtuous and wise.
MEANING:
இல்லறத்தை ஒரு தவம் போல் இயற்றி, அறிவுள்ள மக்களைப் பெறுவதே, பெறற்கரிய பேறாகும்.
அதிகாரம்: 7 மக்கள் பேறு குறள்: 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
No evil comes and no blemish;
Noble sons bring all we wish.
MEANING:
ஓரு நற்பண்புள்ள ஞானக்குழந்தையைப் பிள்ளையாய்ப் பெற்றால், ஏழு தலைமுறைக்குப் பழியும் பாவமும் அணுகாது.
அதிகாரம்: 7 மக்கள் பேறு குறள்: 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
Children are one's wealth indeed
Their wealth is measured by their deed.
MEANING:
குழந்தைகள், நமக்குச் சொந்தமான உடைமை, அவர்களைப் போற்ற வேண்டியது நம் கடமை. அவர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் வினை அவர்களை ஆளுமாறு விடுவதே அறிவுடைமை.
அதிகாரம்: 7 மக்கள் பேறு குறள்: 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
The food is more than nectar sweet
In which one's children hand's insert.
MEANING:
குழந்தைகள் தம் பிஞ்சுக் கைகளால் துழாவிய உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட இனிமை தருவதாம்.
அதிகாரம்: 7 மக்கள் பேறு குறள்: 65
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.
Children's touch delights the body
Sweet to ears are their words lovely.
MEANING:
பிள்ளைகளை அன்புடன் தழுவிக் கொஞ்சுவதே உடலுக்கு இன்பம்; அவர்தம் மழலைச் சொற்களைக் கேட்பதோ செவிக்கு இன்பம்.
No comments:
Post a Comment