அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. Of all who strive for bliss, the great Is he who leads the married state.
MEANING: இயல்பான இல்லறமே ஞான மலர்ச்சிக்கு இட்டுச் செல்லும்; ஞானம் வேண்டி பிற வழிகளில் அலைவோரை விட இல்லற நெறியாளரே உயர்ந்தவர்.
அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 46 அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றில் போஒய்ப் பெறுவது எவன். Who tums form righteous family To be a monk, what profits he?
MEANING: அறநெறிப்படி குடும்பம் நடத்தினால் எல்லா உயர்வும் தேடி வரும். பிற ஆன்மீக நெறிகளை வலியத் தேடி அலைய வேண்டியதில்லை.
அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 45 அன்பும் அறனும் உடைத்துஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. In grace and gain the home excels, where love with virtue sweetly dwells. MEANING: அக வாழ்க்கைக்கு அன்பையும், புற வாழ்க்கைக்கு அறத்தையும் துணையாய்க் கொண்டால் இல்லறம் பண்பும், பயனும் நிறைந்ததாய்த் திகழும்.
அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள்: 44 பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்துஆயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். Sin he shuns and food he shares His home is bright and brighter fares. MEANING: பழிச் செயல்களுக்கு அஞ்சி, பகிர்ந்துண்டு வாழ்வோர்க்கு வாழ்வில் எந்தக்குறையும் வராது.