Showing posts with label thirukkural. Show all posts
Showing posts with label thirukkural. Show all posts

Saturday, September 3, 2016

Thirukkural with English couplets



அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 61

பெரும்அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த 
மக்கள்பேறு அல்ல பிற.

The world no higher bliss bestows
Than children virtuous and wise.

MEANING:

இல்லறத்தை ஒரு தவம் போல் இயற்றி, அறிவுள்ள மக்களைப் பெறுவதே, பெறற்கரிய பேறாகும்.


அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கள் பெறின்.

No evil comes and no blemish;
Noble sons bring all we wish.
 
MEANING:

ஓரு நற்பண்புள்ள ஞானக்குழந்தையைப் பிள்ளையாய்ப் பெற்றால், ஏழு தலைமுறைக்குப் பழியும் பாவமும் அணுகாது.

அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

Children are one's wealth indeed
Their wealth is measured by their deed.

MEANING:

குழந்தைகள், நமக்குச் சொந்தமான உடைமை, அவர்களைப் போற்ற வேண்டியது நம் கடமை. அவர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் வினை அவர்களை ஆளுமாறு விடுவதே அறிவுடைமை.


அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

The food is more than nectar sweet
In which one's children hand's insert.

MEANING:

குழந்தைகள் தம் பிஞ்சுக் கைகளால் துழாவிய உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட இனிமை தருவதாம்.

அதிகாரம்: 7 மக்கள் பேறு  குறள்: 65

மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர் 
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

Children's touch delights the body
Sweet to ears are their words lovely.

MEANING:

பிள்ளைகளை அன்புடன் தழுவிக் கொஞ்சுவதே உடலுக்கு இன்பம்; அவர்தம் மழலைச் சொற்களைக் கேட்பதோ செவிக்கு இன்பம்.




Thursday, September 1, 2016

Thirukkural with English couplets



அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 56

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்வுஇலாள் பெண்.

The good wife guards herself from blame
She tends her spouse and brings him fame.


MEANING:

தன்னைக் காப்பதில், தன் கணவனைக் காப்பதில், தன் குடும்பத்தின் புகழைக் காப்பதில் எப்போதும் கருத்துடன் இருப்பவளே சிறந்த துணைவி.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

Of what avail are watch and ward?
Their purity is women's guard.

MEANING:

பெண்ணைச் சிறையிட்டுக்  காப்பதால் என்ன பயன்?
அவர்கள் தம்மை தாமே காப்பதுதான் சிறப்பு.

அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 58

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

Women who win their husband's heart
Shall flourish where the gods resort.

MEANING:

கணவனைச் சரியாக வழிநடத்தி, புகழும் பெருமையும் உடையவனாய் ஆக்கும் மனைவி, வானவர் உலகம் வழிபடும் பேற்றை பெறுவாள்.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 59

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் 
ஏறுபோல் பீடு நடை. 

A cuckold has not the lion - like gait
Before his detractors aright.


MEANING:

தமக்குப் புகழ் சேர்க்கும் மனைவி வாய்க்கப் பெறாதோர், சிங்கம் போன்ற தம் கம்பீரத்தை இழப்பர், கூணிக் குறுகி வாழ்வர்.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் 
நன்கலம் நன்மக்கள் பேறு.

An honest wife is home's delight
And children good are jewels abright.


MEANING:

நல்ல மனைவியே ஒரு குடும்பத்தின் அழகு, நல்ல குழந்தைகளோ அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள்.

Wednesday, August 31, 2016

Thirukkural with English couplets



அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 51

மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

A good housewife befits the house,
spending with thrift the mates's resource.


MEANING:

குடும்பப் பாங்குடன்  கணவனின் உடல்வளம் , அறிவுவளம் , பொருள்வளத்துக்கேற்ப  வாழ்வை வடிவமைப்பவளே நல்ல மனைவி.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 52

மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.

Bright is home when wife is chaste
If not all greatness is but waste.


MEANING:

குடும்பப்  பாங்கு  இல்லாத மனைவி வாய்த்து விட்டால்  அந்தத் தலைவன் எத்தனை சிறப்புகளை தேடினும் பயனில்லையாம்.


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 53

இல்லதுஎன் இல்லவள் மாண்புஆனால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.

What is rare when wife is good
What can be there when she is bad?


MEANING:

நல்ல மனைவி வாய்த்துவிட்டால் அந்த குடும்பத்தில் இல்லாதது என்ன?  அப்படி வாய்க்காவிட்டால்   அங்கே  இருப்பதுதான்  என்ன ?


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

What greater fortune is for men
Than a constant chaste woman?


MEANING:

சக்கரம்  அசைய வேண்டுமானால் அச்சாணி அசையாமல் நின்று தாங்க வேண்டும்.  கற்பு என்னும் தம் மனத் திண்மையால் குடும்பத்தை அப்படித்  தாங்குபவளே  தகுதியுள்ள மனைவி .


அதிகாரம்: 6 வாழ்க்கைத் துணைநலம்  குறள்: 55

தெய்வம் தொழாஆள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.

Her spouse before god who adores,
Is like rain that at request pours.


MEANING:

கணவனையே தெய்வமாய் நெஞ்சில் நிறைத்திருக்கும்  மனைவி , தன் கணவனுக்குத்  தேவை அறிந்து பெய்யும் பருவ மழையாய்த் திகழ்வாள் .



Thursday, February 12, 2015

Today's Thirukkural with english couplets



அதிகாரம்: 1 கடவுள் வாழ்த்து குறள்: 4 

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.

Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.

MEANING:

'விருப்பு -வெறுப்பு' என்னும் பேதமில்லாதவன் இறைவன்.
அவன் தாளைச் சேர்ந்தார்க்கு துன்பம் இல்லை.